உணர்ந்தேன்
1.“காற்றில் கூட அவள் இருக்கிறாள்” என்றுணர்ந்தேன். தூசியாக கண்ணில் நுழைந்து கலங்கடித்தபோது.
பெண்ணே
2.பெண்ணே! உறங்கும் போதும் என் இமைகளை மூடுவதில்லை என் விழியில் சிறைப்பட்ட உனக்கு வியர்த்து விடுமே!
விளையாட்டு
3. நீ விளையாட்டில் கெட்டிக்காரி என்று சந்தோஷப்பட்டேன் என் வாழ்க்கையில் விளையாடும் வரை!
நீ தான்
4.உன்னை பார்க்க துடிக்கும் என் கண்களுக்கு எப்படி புரியவைப்பேன் நீ தான் என் இமை என்று?
வியர்வை துளி
5.நிலவில் நீர் ஊற்று அவள் கண்ணத்தில் வியர்வைத் துளி
6.உடலுக்கும் உயிருக்கும் இடையே உறவு முறிந்தது மரணம்.
7.யார் திட்டியது கறுத்து கிடக்கிறது மேகத்தின் முகம்.
8.திருடு போனாது வீட்டைக்காக்க வாங்கிய விலை உயர்ந்த நாய்
9.பொது நலமாய் பொழிகிறது மழை சுயநலமாய் விரிகிறது குடை